Header Ads


இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள வேண்டுகோள்


பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற விசேட வங்கி கிளைகளை இன்று குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை திறக்குமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுள்ளது.

எனினும் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ள முடியுமானவரை யுவுஆ இயந்திரங்களையும் ஏனைய தொழினுட்பவசதிகளை பயன்படுத்துமாறு மத்திய வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுள்ளது.

மேலும் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ளும் போது முடியுமானவரை அத்தியாவசிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை விடுத்து கேட்டுக்கொண்டுள்ளது.
Powered by Blogger.