Header Ads


யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட நபர் ஒருவர் இனம் காணப்பட்டார்







யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட நபர் ஒருவர் இனம் காணப்பட்டார் என்ற செய்தியானது உண்மையே ஆனால் அந்த நபரை பற்றி பரப்பபட்ட சில செய்திகள் தவறானவை

அவர் கட்டிட ஒப்பந்தக்காரர். அவ்வகையில் செம்மணியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு ஒப்பந்தமாகிய நிலையில் கடந்த ஞாயிறன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே போதகரை 30 நிமிடங்கள் சந்திக்க வேண்டி ஏற்பட்டது, இதனாலேயே நோய்த்தொற்றுக்குள்ளாக வேண்டி ஏற்பட்டது.

மற்றும் தாமாகவே முன்வந்து தான் வைத்தியசாலையில் தன்னை பரிசோதித்து கொண்டார். அவருக்கு ஆரம்பதிலே கொரோனா இருப்பது கண்டுபிடிக்க பட்டதனால் அவரின் குடும்ப உறுபினர்களும் மற்றும் அயலவர்களும் தாமகவே தம்மை பரிசோதனை செய்ய முன்வந்துள்ளனர்

இதனை அரியாத சில சமூக வலைதள வாதிகள் அவரின் புகைபடத்தையும் பதிவேற்று சில தவறான செய்திகளையும் பரப்பி வருகின்றனர்.

இப்படி பரப்பி வருகின்ற அனைவருக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது. அதில் யாருக்காவது இந்த நோய் வந்து அவர்களை பற்றி இப்படி தவறான செய்திகள் பரப்பபட்டால் உங்களுக்கு எவ்வாறு இருக்கும் என்று தயவுசெய்து உணர்ந்துபாருங்கள்,

அவரின் குடும்ப உறுப்பினர்களின் நலத்தை கருத்தில் கொண்டு தயவுசெய்து சரியான தகவலைப் பகிரவும் என சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்


Powered by Blogger.