வட மாகாணத்திற்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாண மாவட்டங்கள் 5 இல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊடரங்கு சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
மேலும், வடக்கின் 5 வடமாவட்டங்களில் வாசிக்கும் மக்கள் தமது மாவட்டங்களில் இருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரை சந்தித்த மற்றும் போதனையில் கலந்து கொண்ட அனைவரையும் இனங்காணும் வரையில் இந்த பயணத் தடை நீடிக்கப்படும்.
குறித்த 5 மாவட்டங்களில் வசிக்கும் மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கின் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வடக்கின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் பொதுமக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
Post a Comment