மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு செல்ல இது தான் வேண்டும், புகைப்படத்துடன் இதோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து முடித்துள்ளனர்.
தளபதி விஜய்யின் பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கும் விஷயம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தான்.
இந்த விழாவில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது என்று கூறியிருந்தனர். ஆனாலும் இந்த ஆடியோ லான்ச்சை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு செல்ல இந்த பாஸ் தான் வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
இதில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பாஸ், டி- ஸ்டிர்ட், இன்விடேஷன் போன்றவற்றை இருக்கிறது.
Post a Comment