த்ரிஷா இடத்தை பிடிக்கும் அனுஷ்கா: பரபரப்பு தகவல்
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள 152வது திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை திரிஷா ஒப்பந்தமாகி இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறிய த்ரிஷா திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனை அடுத்து இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேறு ஒரு பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் கொரட்டலா சிவா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து உள்ளதால் இந்த படத்தில் அனுஷ்கா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
முன்னதாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது என்றும் ஆனால் காஜல் அகர்வால் மிக அதிக தொகையை சம்பளமாக கேட்டதால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அதனால் காஜல் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறப்படுகிறது
Post a Comment