போதும்.. உடனே அந்த ஜெர்சிக்கு ஓய்வு கொடுங்கள்.. பிசிசிஐ மீது பாயும் கம்பீர்.. இதுதான் காரணம்! வீரர் கவுதம் கம்பீர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருடைய ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருடைய ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சில மாதங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாக இவர் கூறி இருந்தார்.
ஓய்வு
இவரின் ஓய்வை தொடர்ந்து சில மாதங்களில் இந்திய அணியின் இன்னொரு முன்னணி வீரர் யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர் பார்ம் அவுட் மற்றும் வாய்ப்பில்லாத காரணத்தால் யுவராஜ் சிங் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இன்னும் இல்லை
இவர் சில கிளப் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார். இந்த நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே ஓய்வு பெற்ற முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் ஜெர்சி எண் 10 ஆகும். இதற்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்துவிட்டது.
ஆம் அடுத்து என்ன
அதேபோல் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் தோனியின் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அவரின் ஜெர்சி எண் 7க்கும் ஓய்வு கொடுக்க தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
கோரிக்கை
இதனால் தற்போது யுவராஜ் சிங் ஜெர்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார். யுவராஜ் சிங் இந்திய அணியின் லெஜண்டரி வீரர். அவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்
உடனே வேண்டும்
அவருக்கு பிசிசிஐ நிர்வாகம் சரியாக மரியாதை செய்யவில்லை. அவருக்கு சரியாக ஓய்வு பெற கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் அவரின் ஜெர்சிக்கு ஓய்வு கொடுத்து, அதன் மூலமாவது அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார்.
Post a Comment