Header Ads


World Cup 2019: வயசானாலும் சுழலில் அசத்திவரும் இம்ரான் தாகிர் திடீர் ஓய்வு அறிவிப்பு - சிஎஸ்கே.,வில் ஆடுவாரா?


தென் ஆப்ரிக்கா சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

39வயதான இம்ரான் தாகிர் பாகிஸ்தானின் லாகூரில் 
பிறந்திருந்தாலும், தென் ஆப்ரிக்காவுக்காக விளையாடி 

World Cup 2019: வயசானாலும் சுழலில் அசத்திவரும் இம்ரான் தாகிர் திடீர் ஓய்வு அறிவ...
வருகின்றார். 

20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளும், 95 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 37 டி20 போட்டிகளில் 62, 38 ஐபிஎல் போட்டிகளில் 53 விக்கெட்டுகளும் வீழ்த்தி தன் திறமையை 39 வயதிலும் நிருபித்து வருகின்றார். 
ஓய்வு அறிவிப்பு:இந்நிலையில் வரும் உலகக் கோப்பை தொடருடன் தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு வழிவிடும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இருப்பினும் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். 
ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். 

Powered by Blogger.