Header Ads

Virat Kohli: கோலியின் நம்பர் 1 இடத்திற்கு ஆப்பு வைக்கும் வில்லியம்சன்

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விராட் கோலியின் இடத்தை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் பிடிக்க உள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விராட் கோலியின் இடத்தை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் பிடிக்க உள்ளார். 

ஐச்சி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 922 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் விராட் கோலி நம்பர்
Virat Kohli: கோலியின் நம்பர் 1 இடத்திற்கு ஆப்பு வைக்கும் வில்லியம்சன்
 
1 இடத்தில் உள்ளார். 

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் 200 ரன்கள் அடித்த நிலையில் அவரின் டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் உயர்ந்துள்ளன. ஏற்கனவே 2வது இடத்தில் இருந்த வில்லியம்சன் தற்போது விராட் கோலியை விட 7 புள்ளிகள் மட்டும் குறைவாக அதாவது 915 புள்ளிகளுடன் உள்ளார். 

வங்கதேசத்திற்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில், இதில் வில்லியம்சன் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் விராட் கோலியின் நம்பர் 1 இடத்தை வில்லியம்சன் பிடிப்பார்.

இது நடக்கும் பட்சத்தில் அடுத்த ஒரு ஆண்டு வரை விராட் கோலியால் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடிக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்தியா அணி ஐபிஎல் தொடருக்கு பின் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. 

Powered by Blogger.