பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அசலான என்
அன்பை
அசைத்துப் பார்க்க
நினைக்காதே,,..
நீ
அசைக்க தோழனே! தமையனே!
நெஞ்சினித்த நண்பனே!
வாழ்க்கையின் பாகமாய்
சேர்ந்துவிட்ட அன்பனே!
நட்பெனும் ஊரிலே
நட்டுவைத்த பூவென,
புன்னகை செய்து நீ
பூமிதன்னில் வாழ்கவே!
இனிமையும் புதுமையும்
வரமாகட்டும்!
எண்ணியது போல்
யாவும் ஜெயமாகட்டும்!
உன் ஏக்கமும் எண்ணமும்
நிறைவேறட்டும்!
வாழ்க்கையின் சூத்திரம்
வசமாகட்டும்!
உன்னிலே என்னையும்
என்னிலே உன்னையும்
பிணைத்துவிட்ட நட்பினை,
நம்மிலே வைத்தினி
நாம் தினம் வாழுவோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா!
நினைத்தால்
நான்
அழிந்து விடுவேன்,...
அலை இல்லாமல் கடல்
இல்லை;
ராகம் இல்லாமல் பாடல் இல்லை;
காதல் இல்லாமல் மனிதன் இல்லை;
ஜீவன் இல்லாமல் உடல் இல்லை;
சுவை இல்லாமல் உணவு இல்லை;
பசி இல்லாமல் உயிரினங்கள் இல்லை;
உந்தன் நட்பு இல்லாமல் நாங்கள் இல்லவே இல்லை...
இன்றுபோல் என்றும் ஆனந்த புன்னகையுடன் வாழ..
எங்களின் இதயகனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்
உந்தன் தோழமைகள்.....
இன்றைய விடியலில் எனக்கொர் ஆனந்தம்..
நான் இவ்வுலகைக் காண உயிரை தூசென நினனத்து..
என்னை கண்திறக்க வைத்திட்ட என் அன்னை பிறந்திட்ட திருநாள்...
ஆசையோடு தேடியலைந்து வாங்கிச் சேமித்த பரிசுகளோடு காத்திருக்கிறேன்..
அன்னையே நீ கண் விழிப்பதற்கய்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா
என்
அம்முகுட்டி,
செல்லகுட்டி,
வெல்லக்கட்டி,
என் பொம்முகுட்டிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பாசமலரே...!
அன்பு தங்கையே...!
உனை வாழ்த்தி எழுதிட
உடனடி மை தேடினேன்
வானவில் தானாக தானமாக
முன்வந்து தன்னையே தந்தது.
வண்ண வண்ண
மை ஊற்றி
உன்னை உன்னை
வாழ்த்தி எழுதினேன்.
எழுதப்பட்ட தாளுக்கு
சிறகுமுளைத்து
ஏழு வண்ணத்தில்
வண்ணத்துப்பூச்சிகளாக
என் முன்பு
அணிவகுத்து நின்று
வானில் பறந்திட
அனுமதி கேட்டது.
அனுமதி தந்துவிட்டேன்..!
தங்கையே...!
சற்று விழிமூடி திறந்துபார்.
உன் பிறந்தநாளுக்கு வாழ்த்திட
படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
என் வாழ்த்தினை பாடுகிறது பார்..!
~~அன்பு தங்கையே!
~~உழைத்து சாதித்து
~~வாழ்வில் சகலமும்
~~வசப்பட வாழ்த்துகிறேன்!
~~வாழ்க ! நீடுழி வாழ்க..!
~~வையகம் போற்றிட வாழ்க...!
***இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே..! ****
அன்பில் பிறந்து
அறிவில் வளர்ந்து
பாசத்தை பகிர்ந்து
கவலை மறந்து
சந்தோசத்தை விரும்பி
தந்த என் தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எனக்கு அடுத்து என் தாய் வயிற்றில் பிறந்தவள் இவள்..
நான் வளரும் சிறு வயதில் எனக்கு தாயானவள்...
இந்த உலகத்தின் பெண்மையை நேசிக்கும் பருவத்தில் எனக்கு மகள் ஆனவள்...
எப்போதும் எதிலும் எனக்கு நிகரானவள்...
அவள் தான் என் அன்பு தங்கை......
என் அன்பு தங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
இனிவரும் களங்களில் எந்நிலையிலும் தன்னிலை மாறாது, துயரங்கள் அனைத்தையும் தூசாய் தள்ளி,
வெற்றியே உன்னைத்தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்நன்னாளில் நீ எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற வாழ்த்துகிறேன்....
*இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்*
வயதொன்று கூடி
வாழ்க்கையின் ஏற்றத்தை தேடி
துனையொன்றை நாடி
தொய்வின்றி செல்லட்டும்
உங்கள் வாழ்க்கை பயணம் ...
சில தடைகள் பனிகளாகலாம்
சில தடைகள் மலைகளாகலாம்
ஆயினும் மலை தகர்க்கும்
உளிகளாய்
உங்களின் ஒவ்வொரு முயற்சியும்
அமையட்டும் ...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பூவாக இருந்தவள் நீ!
இன்று
பூச்செடியாகி
மொட்டுக்களை தந்துவிட்டாய்!
ஆனாலும் பூவில் சிறந்த பூவாய் உன்னை பாதுகாப்பேன்...
அன்பு அன்பே!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல
அதிர்ஷ்டத்தையும்.!
உலகமே கொண்டாடுவதை போல
வெற்றியையும்..!
கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான
வாழ்க்கையும்...!
ஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்
தன்னம்பிக்கையையும்....!
உன் வாழ்வில் என் கரம் பிடித்து பெற வேண்டியே உன் கரம் பற்றி வாழ்த்துகிறேன்.. இறைவனிடமும் வேண்டுகிறேன்...
*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பே*
உன் பிறந்த நாளான இன்று, இதுவரை பெற்றிராத அத்தனை சந்தோஷத்தையும் உனக்கு தர ஆசை.
இவ்வருடம் நீ ஆசைப்படும் விதம் இன்பமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
நீ ஆரம்பிக்கும் ஒவ்வொரு காரியமும் உனக்கு வெற்றியே கிடைக்கட்டும்.
*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே...*
இனிய பிறந்த நாள் நல்வாழ்துக்கள்.....
அனைத்து துன்பங்களும் நீங்கி
இனி வரும் நாளில் இன்பம் மட்டுமே பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
??சந்தோஷமாய் பறக்கின்றேன்
சிறகுகளாய் நீ இருப்பதால்??
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே..
நண்பா ..!!
நாம் பல ஆண்டு பார்க்காவிடினும்
பல ஆண்டு பேசவிடினும் நேரில் வாழ்த்தவிடினும்
ஒரு குறுசெய்தி உன்னை சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்
இனிய நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
பனித்துதுளியில் கடைந்தெடுத்த
வெண்ணிற இதயம் கொண்டளே.
துன்ப நேரத்திலும் புன்முறுவல்
பூக்கும் ஸ்மைலியே.
வாழ்க்கை கடலில் கண்ணீர் உறிஞ்சினாலும்,
மேகமாக வந்து பன்னீர் _ என்மேல்
பொழிந்தாயே....
அம்மா...
நன்றி சொல்லி கடன் தீர்க்க விரும்பவில்லை
என்றும் நான் உனக்கு
கடன்பட்டிருக்கவே விரும்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அம்மா.....
என்னை ஆட்டுவிக்கும் பத்தாவது கிரஹத்திற்கு
நான் பயணிக்கும் ஒன்பதாவது திசைக்கு
நான் இசைக்கும் எட்டாவது சுரத்திற்கு
என்னை வழிநடத்தும் ஏழாவது அறிவிற்கு
என் உணர்வறியும் ஆறாவது புலனிற்கு
நான் படிக்கும் ஐந்தாவது வேதத்திற்கு
நான் ரசிக்கும் நான்காவது தமிழிற்கு
என்னுடைய மூன்றாவது கண்ணிற்கு
என்னை அரவணைக்கும் இரண்டாவது தாய்க்கு
என்னுடைய முதல் குழந்தைக்கு
எல்லாமுமான என்னவளுக்கு...
எனதருமை மனைவிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உனக்கு இசை என்றால் பிரியம்
எனக்கோ நீ தான் பிரியம்
நீ குழந்தைகளை அன்பாக பார்ப்பாய்
நான் உன்னையே ஒரு குழந்தை போல தான் பார்ப்பேன்
உன் மழலை பேச்சால் குழந்தை ஆகிவிட்டாய்
நீ குழந்தை என்பதால் இன்னும் பிறந்தநாள் கொண்டாட சொல்கிறேன்..
*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
குழந்தை
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல
அதிர்ஷ்டத்தையும்.!
உலகமே கொண்டாடுவதை போல
வெற்றியையும்..!
கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான
வாழ்க்கையும்...!
ஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்
தன்னம்பிக்கையையும்....!
உன் வாழ்வில் என் கரம் பிடித்து பெற வேண்டியே உன் கரம் பற்றி வாழ்த்துகிறேன்.. இறைவனிடமும் வேண்டுகிறேன்...
*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
நான் வணங்கும் தெய்வங்களில் நேரடியானவர்கள் நீங்கள் மட்டுமே..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா..
|