Header Ads


சூரரை போற்று சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி !



சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.




நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. spicejet boeing 737 ரக விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சிலை பாடலை வெளியிட்டனர்.

 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 


Powered by Blogger.