காலியில் களமிறங்கிய ஞானசார தேரர்
காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கண்டறிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
அங்குள்ள நிலைமை கண்டறிந்து விசேடமாக காயமடைந்தவர்கள் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அப்பிரதேசத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனா குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இன்று பொதுபல சேனா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை விஜயம் செய்த குழுவினர் காலி மாவட்ட செயலகத்தில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment